Categories
அரசியல்

பிளான் போட்டாச்சு!…. சிவகாசியில் களமிறங்கும் ஈபிஎஸ்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து இன்று முதல் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அதில் ஈபிஎஸ் 7.02.2022 முதல் 15.02.2022 வரை மேற்கொள்ளவிருக்கும் சுற்று பயணத் திட்டத்தை அதிமுக வெளியிட்டுள்ளது.

இன்று 8.30 மணிக்கு சிவகாசியில் பிரச்சாரத்தை தொடங்கி பிப்.15 சிவகாசி மதுரையில் முடிக்க உள்ளார். அதன்படி சிவகாசியில் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 8.30 மணிக்கும், நாகர்கோவிலில் பகல் 12.30 மணிக்கும், திருநெல்வேலியில் பிற்பகல் 3 மணிக்கும் தூத்துக்குடியில் மாலை 5 மணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அதனைத் தொடர்ந்து மதுரையில் பிப்ரவரி 8-ஆம் தேதி காலை 9 மணிக்கும், திண்டுக்கல்லில் 11.30 மணிக்கும், திருச்சியில் மாலை 5.30 மணிக்கும் பிரசாரம் செய்ய உள்ளார். பின்னர் பிப்ரவரி 10-ஆம் தேதி அன்று தாம்பரம், காஞ்சிபுரம், வேலூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து சென்னை புறநகர், தென் சென்னை, வடசென்னையில் பிப்ரவரி 11-ஆம் தேதியும், ஈரோடு, திருப்பூர், கோவையில் பிப்ரவரி 14-ஆம் தேதியும், கும்பகோணம், தஞ்சாவூரில் பிப்ரவரி 15-ஆம் தேதியும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Categories

Tech |