Categories
தேசிய செய்திகள்

பிளான் போட்டு சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த பட்டதாரி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதுல் மிஷ்ரா என்ற பொறியியல் பட்டதாரி ஒருவர், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனத்தில் சேராமல் வேறு வழியை யோசித்தார். இவர் இன்று தன் நிலத்தில் டிராகன் பழங்களை விளைவித்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக மட்டுமின்றி, சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். குளுகுளு ஏசியில் உட்கார்ந்துகொண்டு காலை ஆட்டிக்கொண்டு பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் அதுல் மிஷ்ரா. ஆனால் சென்னையிலுள்ள கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு தன் சொந்த ஊருக்குச் சென்று தரிசு நிலத்தை பொன் விளையும் பூமியாக்க திட்டமிட்டார்.

இணையத்தில் துழாவி, டிராகன் பழச்செடிகளை வளர்க்கும் முறைகளை அவர் கற்றறிந்தார். தன் சொந்தஊர் விவசாயிகளும் பயனடையும் விதமாக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். அவர் விவசாயம் செய்ய முடியாமல் விட்டுப்போன நிலங்களை ஊழுது டிராகன் செடிகளை நட்டார். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் மட்டுமே விளையும் இந்த டிராகன் பழத்தை, இப்போது நன்கு விளைந்து பெரும்பாலானோர் வாங்கிச் செல்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் இப்போது அதிகம் விளைவிக்கும் பழமாகவும் இருக்கிறது.

செடியை நட்டு ஓராண்டுக்குப் பிறகு தான் பழம் கிடைக்கிறது. தற்போது அவர் கைநிறைய சம்பாதித்து வருகிறார். அக்கம்பக்கத்து நிலத்திலும் இதை விரிவுபடுத்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். விவசாயிகள் பல பேரும் அதுல் மிஷ்ராவை பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த டிராகன் பழத்தை யார் வேண்டுமானாலும் விவசாயம் செய்யலாம். ஆனால் அந்த ஓராண்டுக்குத் தேவையான பணமானது விவசாயிகளிடம் இருந்தால், இந்த விவசாயத்தை எளிதாக செய்யலாம். இதற்கு மாநில அரசு உதவிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |