ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க காலக்கெடுவுடன் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே பதில் அளித்தார். அதில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஐ திறம்பட செயல்படுத்துவதற்கு 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் . தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாகி தலைமை சிறப்பு பணி குழு அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களிடம் பிற பொருட்களை தயாரிக்கும் தொழில் செய்ய அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற தொழில் ஈடுபட உதவி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.