Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்”…. மாநிலங்களுக்கு, மத்திய அரசு கடிதம்….!!!!!!!!!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதே சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவும், தூய்மை பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி கடந்த மே மாதம் 29ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க சிறப்பு முயற்சிகளை எடுப்பதோடு பெருமளவில் மரக்கன்றுகள் அனைத்து குடிமக்கள் மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், தேசிய மாணவர் படையினர் பெரும் தொழில் நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 ன்படி பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் குப்பை சேகரிக்கப்படும் இடத்திலேயே 100 சதவிகித அளவிற்கு அவற்றை தரம் பிரிப்பது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை பிரிப்பதற்கான வசதிகளையும் மேற்கொள்வது அவசியமாகும்.

அத்துடன் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலமாக குப்பை கிடங்குகள் அல்லது நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை குறைக்கவேண்டும். 2591 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒரு முறை மட்டும் பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றன என்று 2500க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் ஒருமுறை மட்டும் உபயோகப் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உரிய ஆதரவை வழங்குவது மட்டுமல்லாமல் சிறப்பு நடவடிக்கை குழுக்களை அமைப்பது, திடீர் சோதனை மேற்கொள்வது மற்றும் தடை உத்தரவை மீறுவோருக்கு  அதிக அபராதம் விதிப்பது  போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக அல்லது சாலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் வகையிலும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கு அருகில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மேயர்கள் வார்டு கவுன்சிலர்கள் தன்னார்வ நிறுவனங்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள் அமைப்புகள், சுய உதவிக் குழுவினர் மாணவர்கள், இளைஞர்களின் குழுவினர் பங்கேற்புடன் கூடியதாக இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த பணிகளை மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆவணப்படுத்துவது உயர்மட்ட அளவில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |