உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரின் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் எனவும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பெண்ணை கொலை செய்தவர்கள் யார்,பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையோரம் கவரில் சுற்றப்பட்டு இளம் பெண்ணின் சடலம் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.