Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் சடலம் மீட்பு…. போலீசார் கூறிய தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு மயான பகுதியில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஒருவரை கொலை செய்து உடலை மயானத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, மீட்கப்பட்ட நபருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். கொலை செய்த பின்னர் உடலை இங்கு கொண்டு வந்து வீசியது போல் தெரியவில்லை. பிரேத பரிசோதனை செய்தது போல் தெரிகிறது. ஏனென்றால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உடலை தான் பிளாஸ்டிக் கவரில் சுற்றி கொடுப்பார்கள். ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த உடலை இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |