Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிளாஸ்டிக் சாலைகள்” ஏழை மக்களுக்கு வீட்டு வசதி திட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அடுத்தடுத்த அறிவிப்புகள்…!!

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் கலைஞரின் வீடு கட்டித்தரும் திட்டத்தின் மூலம் குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறினார். இதற்கான கணக்கெடுப்பு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும். இதனையடுத்து 43 குக்கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமப்புற வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதேப்போன்று 2022-23 ஆம் நிதியாண்டில் 265 குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து பிரதம மந்திரியின்  வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் மூலம் 3,864 நபர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதன்பிறகு 4 ஆயிரம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இன்னும் செய்து கொடுக்காமல் இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த பணிகளை முடிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்பிறகு சிறந்த ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு முன்மாதிரி கிராமம் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 9 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் அரைக்கும் இயந்திரம் வாங்க வேண்டும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்க வேண்டும். இந்த கழிவுகளை தார் சாலை அமைக்கும் போது அதில் போட்டு சாலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். இந்தக் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், செயற்பொறியாளர் சீனிவாசன், முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |