அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவிர்த்த கரடியை வனவிலங்கு உயிரியலாளர்கள் மீட்டு காப்பாற்றியுள்ளனர். ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டுள்ளது. வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக உயிரியல் ஆளர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி குட்டியை கண்டுபிடித்துள்ளனர். கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருத்தி இருக்கும் அந்த ஜாடி அதன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதை அறிந்து கரடி குட்டியை அதிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
அதற்கு மயக்க ஊசி செலுத்துபிடிக்கப்பட்டுள்ளது. கரடி மரத்திலிருந்து கீழே கொண்டுவரப்பட்டு அதன் தலை மாட்டியிருந்த பிளாஸ்டிக் ஜாடி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அதன்பின் அருகில் காத்திருந்து அதன் தாயை கண்டுபிடித்து அந்த குட்டி சேர்ந்து கொண்டது. இந்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் வனவிலங்கு உயிரியலாளர்கள் கூறியிருப்பதாவது, பலூன்கள், மீன்பிடிப்பாதை அல்லது பிளாஸ்டிக் பொருள்களில் என எதுவாக இருந்தாலும் அவற்றை வீசி செல்வதால் வனவிலங்குகள் அவற்றை அடிக்கடி உட்கொள்ளலாம் அல்லது சிக்கிக் கொள்ளலாம்.
மேலும் குப்பைகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை முறையாக பாதுகாப்பதன் மூலமாக வனவிலங்குகள் இதுபோன்ற சூழ்நிலை சிக்காமல் இருக்க அனைவரும் உதவி செய்யலாம் என பொதுமக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தநிலையில் கரடி குட்டியை காப்பாற்றிய வனவிலங்கு உயிரியலாளர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.