Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் துகள்கள்: எங்கென்னு தெரியுமா…. கண்டுபிடித்த நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள்….!!!!

அண்டார்டிகா பனியினில் பிளாஸ்டிக் நுண்துகள்களானது இருக்கிறது என முதல் முதலாக நியூசிலாந்து காண்டர்பரி பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கிடையில் கண்டுபிடிப்பாளர்கள் 19 இடங்களில் பனிமாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அவை ஒவ்வொன்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக்துகள்கள் உள்ளதை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த பிளாஸ்டிக் துகள்கள் அரிப்பிலிருந்து உருவாகியது எனவும் அரிசியைவிட சிறியது எனவும் வெறும் கண்களால் பார்த்தால் தெரியாது எனவும் தகவல்கள் கூறுகிறது.

அத்துடன் 1 லிட்டர் உருகிய பனியில் சராசரியாக 29 துகள்கள் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அதில் 13 வகையான பிளாஸ்டிக்குகளை அடையாளம் கண்டுள்ளனர். அவை பொதுவான பாலி எதிலீன் டெரெப்தாலேட்டாகும். இந்த பிளாஸ்டிக் தான் குளிர்பானம் பாட்டில்களிலும், ஆடைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது 79 % மாதிரிகளில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பிளாஸ்டிக்துகள்கள் எங்கு இருந்து அண்டார்டிகாவிற்கு வந்தது என்ற கேள்விஎழும்.

இது வான் வழியே காற்றில் வந்தவை எனவும் அவை 6 ஆயிரம் கி.மீ. தொலைவில் உருவானவையாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்குமுன் அண்டார்டிக்கடல் பனி மற்றும் மேற்பரப்பு நீரில் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கின்றனர். தற்போதுதான் புது பனியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ஆம் வருடம் எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் ஆராய்ச்சியாளர்கள் நுண்ணிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |