பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆசிரியர்கள் ரம்யா, கவிதா போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தின் போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் துணி பையை பயன்படுத்துவோம் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் நெல்லூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கருப்பையா செய்துள்ளார். இந்த நிலையில் இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.