Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிக்கொண்ட தலை… “நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்”…. வைரலாகும் வீடியோ…!!!

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை விட்டு மாட்டிகொண்ட நாயை சிலர் காப்பாற்றிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மனிதனுக்கு மிகவும் நெருக்கமான செல்லப்பிராணி என்றால் அது நாய்தான். நன்றியுள்ள பிராணி என்று கூறப்படும் நாய், தன் எஜமானருக்காக எதையும் செய்யக் கூடியது. தற்போது சமூக வலைத்தளங்களில் சைக்கிளில் செல்லும் குழு ஒன்று ஒரு நாய்க்கு உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் ஒரு நாயின் தலை சிக்கி கொண்டது. இதை கண்ட ஒரு சைக்கிள் குழு அந்த நாய்க்கு உதவ முன்வந்தனர். நாய்க்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அந்த பிளாஸ்டிக் பாட்டிலை நாயின் தலையில் இருந்து எடுக்க அவர்கள் முயற்சி செய்து வந்தனர்.

https://twitter.com/MackBeckyComedy/status/1445406773687488513

அதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் தனக்கு உதவ வந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டு நாயும் பிளாஸ்டிக் பாட்டிலை எடுக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தது. மேலும் அந்த பாட்டிலை எடுக்க முயற்சி செய்தபோது அருகிலிருந்தவர்களும் அந்த நாய்க்கு உதவி செய்தனர். பின்னர் வெற்றிகரமாக நாயின் தலையில் இருந்து பாட்டில் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்த அந்த நாய் தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் காலை சுற்றி வந்து, தனது வாலை ஆட்டி நன்றியைத் தெரிவித்தது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |