பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மஞ்சப்பை உபயோகப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக முதல்வரின் பிளாஸ்டிக் மாசில்லா திட்டத்தின்படி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சள் பையை உபயோகப்படுத்த வேண்டும் என கூறினார். இதன்பிறகு கடைகளில் உணவுப் பொருட்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உரை, பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதம் உள்ளிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்குப்பதிலாக வாழை இலை, தாமரை இலை, பாக்கு இலை, உலோகம், பீங்கான் மற்றும் கண்ணாடி, சணல் பைகள், காலணிகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
இதுகுறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதனையடுத்து நமது பாரம்பரியமான மஞ்சள் பையை அனைத்து மக்களும் பயன்படுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து நெகிழி பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழு அலுவலர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்த்து, அதற்குப்பதிலாக மஞ்சப்பை, துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்