ஆப்பிள் ஐபோன் 14 அறிமுகம் செய்ய இன்னும் சில தினங்களே இருக்கிறது. இருப்பினும் உங்களுக்கு இன்னும் ஐபோன் 13 வாங்கும் எண்ணம் இருந்தால், ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. பிளிப்கார்ட் ஐபோன் 13 ஸ்மார்ட் போனில் ஒரு தனித்துவமான சலுகையை வழங்குகிறது. ஐபோன் 13ன் அசல் விலை ரூபாய்.79,900 ஆகும். பிளிப்கார்ட்டில் ரூபாய்.14,000 தள்ளுபடியுடன் இது பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த டீலை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது பழைய போன்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் வாயிலாக புது போன்களில் ரூபாய்.19,000 வரை தள்ளுபடி பெறலாம். இது தவிர்த்து எச்சிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 13ல் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
இந்த டீலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை தெரிந்துகொள்வோம்
ஐபோன் 13ன் விலை முதலில் 128 ஜிபி-க்கு ரூபாய்.79,900ஆக இருந்தது. இது பிளிப்கார்ட்டில் ரூபாய்.65,999க்கு விற்கப்படுகிறது. இது ஐபோன் 13-க்கான மிகக்குறைந்த விலையாகும். ஐபோன் 13 அமேசானில் 69,900-க்கு விற்பனை செய்யபடுகிறது. பிளிப்கார்ட்டீல் ஸ்மார்ட்போனில் மிக நல்ல தள்ளுபடிகளை வழங்குகிறது. ரூபாய்.14,000 பிளாட் தள்ளுபடி தவிர்த்து, வாடிக்கையாளர்கள் தங்களது பழைய போன்களை கொடுத்து ரூபாய்.19,000 வரை தள்ளுபடி பெறலாம். பிளிப்கார்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ரூபாய்2000 கூடுதல் தள்ளுபடியும் வழங்குகிறது. ஐபோன் 11, இபோன் 12 மற்றும் பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி பொருந்தும். இருந்தாலும் உங்களது பழைய ஐபோனின் பரிமாற்ற சலுகை விலையானது பெரும்பாலும் போனின் நிலை மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டைப் பொறுத்தது.
ஐபோன் 13 விவரக் குறிப்புகள்
ஐபோன் 13 2532×1170 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 460ppi பிக்சல் டென்சிடி கொண்ட 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ஐபோன் 13 A15 Bionic ஆனது 5nm hexa-core செயலி வாயிலாக இயக்கப்படுகிறது. அத்துடன் இது 128GB, 256GB மற்றும் 512GB உள்ளிட்ட 3 சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் iOS 15ல் இயங்குகிறது. ஆப்டிக்ஸைப் பொறுத்தவரையிலும் ஐபோன் 13 பின் புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டு உள்ளது. இவற்றில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 12எம்பி- முதன்மை கேமரா இருக்கிறது. முன் பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12 மெகாபிக்சல் லென்ஸ் இருக்கிறது. ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரி விவரக் குறிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், ஐபோன் 13ல் 3240mAh பேட்டரி இருக்கிறது. இது 20W வரையிலான பாஸ்ட் சார்ஜிங் சபோர்டுடன் வரும் என்று நம்பப்படுகிறது.