நீங்கள் பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போது, அந்த தயாரிப்புக்குப் பதில் மலிவான தயாரிப்பு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி நடைபெறாமல் இருக்க பிளிப்கார்டு நிறுவனம் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியை தடுத்து விழிப்புடன் இருக்கலாம். அதாவது, பிளிப்கார்டில் உள்ள அந்த அம்சத்தின் பெயர் Flipkart Open Box Delivery என அழைக்கப்படுகிறது.
நீங்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில், இந்த அமைப்பை இயக்கவேண்டும். இந்த அமைப்பை நீங்கள் ஆன் செய்ததும், டெலிவரிபாய் உங்களது பேக்கேஜை சேதப்படுத்துவதற்குரிய சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட நீங்கி விடும். அதற்குப் பதில் உங்களது பேக்கேஜில் வைப்பதன் வாயிலாக சில தவறான பொருட்கள் உங்களுக்கு டெலிவரி செய்யப்படுவதும் தடுக்கப்படும்.
இந்த சிறிய செட்டிங்ஸ் வாயிலாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை வீணாக்காமல் சேமிக்கமுடியும். இது அண்மையில் தொடங்கப்பட்டது ஆகும். Flipkart Open Box Delivery அமைப்பில், டெலிவரிபாய் உங்களது ஆர்டருடன் வீட்டுக்கு வரும்போது, அவரே ஆர்டரைத் திறக்கிறார். அதுமட்டுமின்றி ஆர்டரில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதனைத் திருப்பித் தரலாம் மற்றும் அதுபற்றி நிறுவனத்திடம் கேட்கலாம். அதன்பின் உங்களது பணத்தை திரும்பப் பெறலாம்.