பிளிப்கார்டில் தீபாவளி பண்டிகைக்குரிய சிறப்பு விற்பனை துவங்கிவிட்டது. மேலும் உறுப்பினர்களுக்குரிய பிளிப்கார்ட் பிக்தீபாவளி சேல் நேற்று லைவ் ஆனது. பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்குரிய 6 நாட்கள் விற்பனையானது நேற்று நள்ளிரவு துவங்கியது. அக்டோபர் 16ம் தேதி இந்த விற்பனை முடிவடைய இருக்கிறது. இவ்விற்பனையில் மின்னணு கேஜெட்டுகள் மற்றும் ஆப்பிள் ஐபோன் உள்பட பல்வேறு வித பொருட்களுக்கு 80 % வரை தள்ளுபடி வழங்குவதாக இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் கூறுகிறது. பிளிக்பார்டின் இணையதளத்தின் அடிப்படையில், ஆப்பிள் ஐபோன் 13 128ஜிபி ஸ்டோரேஜ் வகை இப்போது ரூபாய்.58,990-க்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
வங்கிச்சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகளுடன் விற்பனையின் ஒரு பகுதியாக ரூபாய்.2000-க்கு மேல் தள்ளுபடியில் இப்போனை வாங்கலாம். ஐபோன் 13 ஸ்மார்ட் போன் Apple A15 பயோனிக் சிப்செட் வாயிலாக இயக்கப்படுகிறது. இதனை நிறுவனம் ஐபோன் 14 உடன் வழங்குகிறது. ஐபோன் 13-ல் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு உள்ளது. இது 1200 nits உச்சபிரகாசத்தை (பீக் ப்ரைட்னஸ்) வழங்குகிறது. அத்துடன் ஆப்பிள் ஐபோன் 12 மினியை பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூபாய்.33,740 முதல் வாங்கலாம். இவை 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உடன் கூடிய சிறு திரையை கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் வாயிலாக இயக்கப்படுகிறது.
அதேபோன்று இணையத்தில் ரூபாய்.35,990-க்கு பட்டியலிடப்பட்டு இருக்கும் ஆப்பிள் ஐபோன் 11-ஐ பிளிப்கார்ட் பிக்தீபாவளி விற்பனையின் ஒருபகுதியாக ரூபாய்.33,740-க்கு வாங்கலாம். எஸ்பிஐ மற்றும் கோடக் வங்கி கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த விற்பனையின்போது, பிளிப்கார்ட் நிறுவனமானது ஸ்மார்ட் போன்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குகிறது. பரிமாற்றம் செய்யக்கூடிய ஸ்மார்ட் போன்கள் இந்த பிளாட்பார்மில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அதாவது, Oppo Reno 8 5G ஐ 16,900 ரூபாய் வரையிலும், Realme 9 Pro+ 5G ஐ 18,900 ரூபாய் வரையிலும் மாற்றிக்கொள்ளலாம். இதனுடன் ரூபாய்.99 முதல் துவங்கும் திரை சேத பாதுகாப்பான ஸ்க்ரீன் டேமேஜ் ப்ரொடெக்ஷன் வசதியும் பிளிப்கரட் பே லேட்டர் ஆப்ஷனும் (Flipkart Pay Later) பிளிப்கார்ட் வாயிலாக வழங்கப்படுகிறது.