Categories
அரசியல்

பிளீச்சிங்க் பவுடர் முதல் துடைப்பம் வரை…. எதையும் விட்டு வைக்கல…. கனிமொழி தாக்கு…!!!

பாளையங்கோட்டை ஒன்றிய வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், திமுக எம்பியுமான கனிமொழி பேசுகையில், “திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் மக்கள் கொரோனா பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி மக்களை பாதுகாக்காமல், ப்ளீச்சிங் பவுடர் முதல் துடைப்பம் வரை கொள்ளையடிப்பதில் தான் அதிமுகவினர் குறியாக இருந்தனர். இந்நிலையில், அதிலிருந்து மக்களை காப்பாற்றி தற்போது அவர்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது தான் உள்ளாட்சி அமைப்பு. எனவே அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்பிற்கு உள்ளது” என்று பேசியுள்ளார்.

Categories

Tech |