Categories
சினிமா தமிழ் சினிமா

பிளீஸ்! அம்மாவை இப்படியெல்லாம் பண்ணாதீங்க…. தமிழ் நடிகர் உருக்கமான வீடியோ…!!!!

பெற்றோரை பார்த்துக் கொள்வது குறித்து எஸ்டி சூர்யா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒருசில பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களுடைய பெற்றோர்களை கவனிக்காமல் முதியோர் இல்லங்களிலோ அல்லது வீதிகளிலேயோ விட்டு விடுகிறார்கள். தங்களது பிள்ளைகளைப் பெற்று ஆளாக்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் இதுபோன்று கஷ்டப்படுவது மிகவும் கொடூரமானது.

இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா சாலை ஓரத்தில் உள்ள ஒரு மூதாட்டிக்கு சிறுவன் உணவு கொடுக்கும் வீடியோவை  ரீட்வீட் செய்துள்ளார். சிறுவன் ஒருவன் மூதாட்டிக்கு உணவு கொடுக்கும் வீடியோவை டுவிட்டரில் ஒருவர் ஷேர் செய்து “உங்கள் பெற்றோர்களை இதுபோன்று சாலை ஓரத்தில் தவிக்க விடாதீர்கள் “என்று பதிவு செய்திருந்தார். அதனை நடிகர் எஸ் ஜே சூர்யா ரீட்வீட் செய்து தனது ரசிகர்களுக்கும் இந்த செய்தியை உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |