தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. இந்த சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மைய கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணி, நாம் தமிழர் என 5முறை போட்டியாக இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக கட்சியை அதிமுக வேட்பாளர் புறக்கணிக்கிறார் என்பது போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றத்தின் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராஜன்செல்லப்பா, வாக்கு சேகரிக்கும் துண்டறிக்கையில், பிரதமர் மோடி போட்டோவையோ அல்லது கூட்டணி கட்சியான பாஜகவின் சின்னத்தையும் குறிப்பிடாமல் வெறும் அதிமுக சின்னத்தை மட்டும் போட்டு ஓட்டு கேட்பது பல்வேறு தரப்பினரிடமும் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.
இந்த நிலையில்தான் மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு எடப்பாடியாரே! உங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மோடியின் படத்தை போடாமல், BJP யின் பெயரைக்கூடப் போடாமல் துண்டறிக்கைகள் அடித்து வாக்கு கேட்கிறார்கள். இது என்ன வகை கூட்டணி தர்மம்? மோடியின் படத்தை பயண்படுத்தச்சொல்லுங்கள். பிளீஸ்! என பதிவிட்டுள்ளார்.