Categories
உலக செய்திகள்

பிள்ளைகளை நரபலி செய்த சம்பவம்… திடீர் திருப்பம்.. மூத்த மகளின் காதலருக்கு தொடர்பா…?

சித்தூரை சேர்ந்த தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. 

சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் மதனப்பள்ளி சிவநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி புருஷோத்தம நாயுடு மற்றும் பத்மஜா. இத்தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளான அலேக்கியா மற்றும் சாயி திவ்யா ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாக நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இந்த கொடூர சம்பவத்தில் இத்தம்பதியினரின் மூத்த மகளான அலேக்கியாவின் காதலரும் சம்பந்தப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இச்சம்பவம் நடந்த அன்று அலேக்கியாவின்  காதலர் அலேக்கியாவை மொபைலில் பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

அதன் பின்பு தான் அலேக்கியாவின் மொபைல் இணைப்பு துண்டிக்கப்பட்டது இவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த இளைஞர் அலேக்கியாவின்  வீட்டிற்கு விரைந்துள்ளார். அங்கு சென்றதும் அதிர்ச்சிகரமான காட்சியை பார்த்துள்ளார். அதன் பின்பு உடனடியாக காவல் துறைக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு  அக்கம்பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார். இவர் மூலமாக தான் இச்சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |