ஐஸ்வர்யாவும், தனுஷும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற தனது விருப்பத்தை ரஜினி அவர்களது மகன்களை வைத்து சாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்களும், உறவினர்களும் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ரஜினி அவருடைய மகளை தனுசுடன் கட்டாயமாக சேர்ந்து வாழ வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். இந்நிலையில் தனுஷ் மற்றொரு ஆயுதத்தை கையாளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் ஐஸ்வர்யாவின் மகன்களை வைத்து இருவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் களமிறங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகவுள்ளது.