Categories
அரசியல்

பிள்ளையாருக்கு பூரணம் வைத்து கொழுக்கட்டை படையல்…. இதன் பொருள் என்ன தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

இவ்வருடம் ரொம்பவே விசேஷமான யோகங்களையும் கொடுக்கக்கூடிய அற்புதமான விநாயகர் சதுர்த்தியாக வந்துள்ளது. 10 வருடங்களுக்கு முன் இந்த யோகம் இருந்தது உண்டு. அதே போல இவ்வருடம் ரவி யோகம் கூடிய நன்னாளாக விளங்குகிறது.  இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கு சுப முகூர்த்த நேரம் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காலை 11.04 முதல் அன்றைய தினம் மதியம் 01.37 வரை ஆகும். இந்த சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாளில் விநாயகர் உங்களுக்கு கேட்ட வரத்தை அள்ளி கொடுப்பார் என்பது காலம் காலமாக இந்து மக்களின் நம்பிக்கை ஆகும். எனவே இந்த நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் நிறுவுவது முறையாகும்.

அதேபோன்று விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை…. அரிசி மாவுக்குள் பூரணம் வைத்து கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இதன் பொருள் என்ன தெரியுமா? அரிசி மாவு சுவைற்றதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. சுவையில்லாத அரிசி மாவு சுவையுள்ள வெல்லத்துடன் சேரும் போது எவ்வாறு விருப்பமுடன் உண்ணும் திண்பண்டமாக மாறுகிறதோ அது போல பக்தி கலந்தவாழ்க்கையே சுவையுள்ளதாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.

இந்நாளில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கும் தீய யோகங்கள் அனைத்தும் அழியும். நல்ல யோகங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த யோகத்தில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு வீடு, வாகன யோகம் கூட கிட்டும் என்பது ஐதீகம் எனவே விநாயகரை மனமுருக பிரார்த்தியுங்கள் நல்லதே நடக்கும்.

Categories

Tech |