Categories
அரசியல்

“பிள்ளையார் சுழி” என்பதன் விளக்கம் என்ன….? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்க….!!!!

நாளை மறுதனம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பிள்ளையார் சுழி உருவாகியதன் நோக்கம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாம் எசெய்யும் எந்த ஒரு மங்களகரமான செயலாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு தான் அந்த காரியத்தை தொடங்குவோம். விநாயகர் தன்னுடைய தாய் தந்தையர் ஆன உமையாள், உமையவளை துணையாகவும் முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக “உ” என்ற வார்த்தையை உருவாக்கியதாக கூறுவது உண்டு. முன்பு ஓலைச்சுவடிகளில் தான் முன்னோர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள்.

அந்த வகையில் உ என்ற எழுத்து எழுதும் பொழுது ஓலைச்சுவடியின் வலிமையும் எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும் என்று கூறுவார்கள். இதன் காரணமாகவே எழுத தொடங்குவதற்கு முன்பாக நம் முன்னோர்கள் உ என்ற எழுத்தை கடைபிடித்து வந்தார்கள் என்று அறிவுபூர்வமாக கருத்து கூறப்படுகிறது. இதற்கு ஆன்மீக கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிரெழுத்துக்களில் உகரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்தானது விநாயக பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை பிள்ளையார் சுழி என்றும் கூறுவார்கள்.

விநாயகர் தடைகளை அகற்றுபவர் எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றி பெற விநாயகரை தொடர்ந்து நாமும் அவருடைய உ என்ற பிள்ளையார் சொல்லியை பயன்படுத்தி வருகிறோம். உ என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்குகிறது. வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. இறைவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவர் என்பதை குறிக்கும் விதமாக இது அமைந்துள்ளது.

வட்டத்தை தொடர்ந்து வரும் கோடு வளைந்து பின் நேராக சொல்லும். இதனை ஆர்ஜவம் என்பார்கள். இதற்கு நேர்மை என்றும் பொருள். வாழ்க்கையில் வளைந்து கொடு அதே சமயம் நேர்மை கைவிடாதே என்பதே இதன் பொருள். பிள்ளையார் சுழி போட்டு காரியத்தை தொடங்குபவர்கள் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

Categories

Tech |