Categories
உலக செய்திகள்

பிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …!!

டிக் டாக் செயலியை நீக்க அமேசான் நிறுவனம் உத்தரவு போட்ட சீனா நாட்டை கதிகலங்க வைத்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி இந்திய – சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவிற்கும் இதேபோல உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பரபரப்பு நிலவி வந்த நிலையில், உயர்மட்ட பேச்சுவார்த்தையால் பதற்றம், பரபரப்பு தணிந்து வீரர்கள் எல்லையில் இருந்து பின்வாங்கி உள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி டிக் டாக், யூசி பிரௌசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு உலகளவில் பிற நாடுகளில் எதிரொலித்தன. இந்தியாவை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்தன.

இதனையடுத்து தற்போது அமேசான் நிறுவனம், தங்களது ஊழியர்கள் வைத்துள்ள ஸ்மார்ட் போனில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கவேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த உத்தரவு மிக பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு சீனா மீது உலக நாடுகள் மிகுந்த கோபத்தில் இருந்து வந்த நிலையில், இந்தியா பிள்ளையார் சுழி போடும் வகையில் முதல் நடவடிக்கையாக நாட்டில் உள்ள சீன செயலிகளுக்கு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரப்பிய கோபத்தில் உலக நாடுகளும் அடுத்தடுத்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால்…. இது சீனாவை ஆட்டம் காண வைத்துள்ளது.

Categories

Tech |