பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள போடி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.