Categories
அரசியல்

பிள்ளையார் வலது தந்தம் எப்படி உடைந்தது?… இந்த விநாயகர் சதுர்த்தியில் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி நாளை 31-ம் தேதி வருகிறது. நாடு முழுதும் பிள்ளையார் அவதரித்த இந்த நாளை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஈசனின் திருமகனாகவும், முருகப் பெருமானின் அண்ணனாகவும், அன்னை சக்தியின் செல்லப் பிள்ளையாகவும் சைவம், கௌமாரம், சாக்தம் என மூன்றிலும் கொண்டாடப்படும் விநாயக மூர்த்தி வைணவ சம்பிரதாயத்திலும் வெகுவாகக் கொண்டாடப்படுகிறது.

வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என விஷ்ணுவின் சேனை முதலிகளில் ஒருவராக வழிபடும் வழக்கம் பலவிஷ்ணு ஆலயங்களில் இருந்து வருகிறது. அத்துடன் கஜானனர் எனவும் அழைக்கப்படுகிறார். அத்துடன் திருமாலின் தங்கையான பார்வதியின் மூத்தப்பிள்ளை என்பதால் கணபதி மருமகன் என்ற உறவோடும் திருமாலோடும் இணைத்துக் கொண்டாடப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் வைணவர்களின் முக்கிய காவியமான மஹாபாரதத்தை வியாசர் சொல்ல தடைபடாமல் எழுதியவர் விநாயகர். அப்படி எழுதும்போதே எழுத்தாணி உடைந்ததால், தன் வலதுதந்தத்தையே உடைத்து எழுதி ஏக தந்தர் என்ற திருநாமமும் கொண்டார் கணபதி.

விபீஷணன் இலங்கைக்குக் கொண்டு சென்ற விஷ்ணு மூர்த்தத்தை திருவரங்கத்திலேயே தங்கி விட உதவியதும் கணபதி தான். இதில் திருவரங்கத்தில் பள்ளிகொள்ள விரும்பிய ரங்கநாதர் கணபதியைக் கொண்டே எழுந்தருளினார். திருவரங்கம் ஆலயம் காவிரி தீரத்தில் அமைந்திருக்கவும் கணபதியே காரணம் என்று கூறலாம். திருமாலின் அவதாரங்களில் ஒருவரான பரசு ராமரை எதிர்த்த வரலாறும் விநாயகருக்கு இருக்கிறது. கயிலாயத்தில் ஈசனைத் தரிசிக்க வந்த பரசு ராமரை கணபதி தடுத்து நிறுத்துகிறார்.

இதன் காரணமாக கோபம்கொண்ட பரசு ராமர் ஈசனிடம் இருந்து தான் பெற்ற கோடரியை கணபதி மீது வீசுகிறார். தனது தந்தையின் சக்திகொண்ட அந்த கோடரியைத் தடுக்காமல் அதனை தன் தந்ததில் ஏற்றுக்கொண்டபோது தந்தம் உடைந்துபோனது என்ற புராணத் தகவலும் உள்ளது. இன்றும் விநாயகர் சதுர்த்தியன்று தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலிலிருந்து பட்டாச்சாரியார் நைவேத்தியம், புனித தீர்த்தம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தேரெழுந்தூரிலுள்ள கம்பர் வழிபட்ட கணபதி கோவிலுக்குச் செல்வார். அப்போது அங்கு அவரே அபிஷேகம் செய்து, நைவேத்யம் சமர்ப்பிப்பார்.

இந்த நடைமுறையானது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு சம்பிரதாயம் என்று மக்கள் கூறுகிறர்கள். அனுமனும் கணபதியும் இணைந்த ஸ்ரீ ஆத்யந்த பிரபு வடிவமும் வைணவமும் கணபதியும் இணைந்ததன் குறியீடுதானே. கஜமுகா சுரனின் பக்தியில் அகப்பட்ட சிவபெருமானை மீட்டெடுக்க கணபதி நந்தி மற்றும் திருமால் துணையை நாடினார். இந்நிலையில் அவர்களும் கஜமுகா சுரனின் முன் நாட்டியமாடி விநாயகருக்கு துணை புரிந்தனர் என புராணங்கள் கூறுகிறது. அத்துடன் திருமாலின் புகழ்பாடும் புராணங்களும் கணபதியைத் தொழுகிறது. எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவராலும் வணங்கப்படுபவர் விநாயகர்.

Categories

Tech |