Categories
தேசிய செய்திகள்

பிள்ளை பிடிக்க வந்திருக்காங்க….! “சாமியாரை அடித்து, புரட்டி எடுத்த கிராம மக்கள்”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலத்தில் வழி கேட்டு வந்த சாமியாரை தவறாக எண்ணி கிராமவாசிகள் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்கு புறப்பட்டுள்ளனர். மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்த போது வழி தெரியாமல் இருந்த இவர்கள் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் உதவி கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் பிள்ளை பிடிக்க வந்தவர்கள் என்று எண்ணி கிராமவாசிகள் ஒன்று திரண்டு சாமியாரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தனர். இந்த வீடியோ வெளிவந்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எங்களுக்கு எந்த ஒரு புகார் வரவில்லை.  ஆனால் உண்மை தன்மையை ஆய்வு செய்து வருகிறோம் என்று மாவட்ட சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |