கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் சன்னியாசி(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது முதியவர் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சன்னியாசிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.