சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரின் மனைவி நீலாம்பரி மூன்றாவதாக கர்ப்பமாகியுள்ளார். இதை எடுத்து அவர் பிரசவத்திற்காக எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இவரின் மூத்த மகன் நான்கு வயது பிரிண்ஸ் பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளான். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த புருசோத்தமன் மகனை தேடி சென்றார்.
அப்போது மண்ணூர்பேட்டை நேரு நகரில் உள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மிதந்த சிறுவனின் உடலை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றின் சுவரைத் தாண்டி குழந்தையால் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இல்லை, எனவே குழந்தையை யாராவது கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.