Categories
லைப் ஸ்டைல்

பிஸ்கட் விரும்பி சாப்பிடுவீர்களா…? அப்போ இது உங்களுக்கு தான்….!!

அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் ஒன்று தான் பிஸ்கட். முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம் இது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதுபோல பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை தற்போது காணலாம்.

பிஸ்கெட் தயாரிப்பின்போது அதிக வெப்பத்தால் எண்ணெய் டால்டா போன்றவைசூடாக்கும் போது உருவாகும் ட்ரான்ஸ்லேட் அமிலங்கள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை பெரும்பாலும் குறிப்பிடப்படுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்வதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதய நோய் வரும் அபாயம் உண்டு.

பிஸ்கெட் கெடாமல் இருக்கவும் சுவைக்காகவும் உப்பு அதிகம் அளவில் பயன்படுத்தப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றை சாப்பிடுவதால் தேவையற்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இதைவிட இதன் சுவை, நிறம் பதப்படுத்துதல் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் சில வேதிப்பொருட்கள் பெரும்பாலும் தடசெய்யப்பட்டவையாகவே இருக்கலாம்.

பிஸ்கட் மிருதுவாக இருப்பதற்கு குளூட்டன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. மேலும்  அதன் வடிவத்திற்காக சர்க்கரை சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் சோடியம் பை-கார்பனேட் நிறமிகள் போன்றவை கலக்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ அந்த அளவு அதிக புரதச் சத்துக்களை பெற்றுள்ளதாக அர்த்தம். மிருது தன்மை குறைந்தால் கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

சுக்ரோஸ் அதிகம் உள்ள சர்க்கரை பிஸ்கட்டில் அதிகமாக கலக்கப்பட்டு உடலில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரை நோய் இதயம் சார்ந்த நோய் கொழுப்பு சத்து அதிகரித்தல் போன்றவை ஏற்படுகிறது.

இந்த பிஸ்கட்டின் முக்கிய வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை சராசரி மூன்று பிஸ்கட்களை சாப்பிடுவதால் அந்த குழந்தைக்கு பசி இருக்காது. பெரும்பாலான குழந்தைகள் பாலில் நனைத்த பிஸ்கட்டுகளை விரும்புவார்கள் இது முற்றிலும் தவறான பழக்கம். அதிலும் கிரீன் பிஸ்கட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |