Categories
மாநில செய்திகள்

பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பி.ஆர்க். படிப்புக்கான   தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டிட கலை தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் பி.ஆர்க்.  படிப்புக்கு  ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி வரை  https:// WWW.tneaoline.org என்ற  இணையதளத்தின் மூலம் 2ஆயிரத்து 491  மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவற்றில் ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 3 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 22 விளையாட்டு வீரர்களும், 18 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அரசு பள்ளி மாணவரில்  விளையாட்டு வீரர் ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கட்டிடக்கலை தொழில்நுட்ப படிப்புக்கான தேசிய திறனறிவு தேர்வில் தகுதி பெற்ற 114 மாணவர்களும், ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்ற 70 மாணவர்களும், நாட்டா மட்டும் ஜே. இ.இ தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்ற 423 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர். நமது தமிழகத்தில் உள்ள 38 பி.ஆர்க்  கட்டிடக்கலை கல்லூரியில் 1,609 காலியிடங்கள் உள்ளது.

இந்த இடங்கள் அனைத்தும் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். மேலும் தரவரிசை பட்டையில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் தமிழ்நாடு பொறியாளர் மாணவர் சேர்க்கை மையங்களில் இன்று அல்லது நாளை தெரிவிக்கலாம். இதனையடுத்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கும், பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெறும். மேலும்  11-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும்.  இது குறித்து தகவல்கள் பெற வேண்டும் என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என  கூறியுள்ளனர்.

Categories

Tech |