தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி500 பி கல்லூரி தொழில்நுட்ப கல்லூரி நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்க பேராசிரியர் குழுவை நேரில் அனுப்பி ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
20 மாணவருக்கு ஒரு பேராசியர் உள்ளாரா, உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என பேராசிரியர்கள் ஆய்வு செய்த பிறகே கல்லூரிக்கான அங்கீகாரத்தை நீட்டிப்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்யும். அங்கீகாரம் பெற்று விண்ணப்பிக்க பொறியியல் கல்லூரிகளுக்கு மார்ச் இறுதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.