Categories
மாநில செய்திகள்

பி.இ முதலாம் ஆண்டு மாணவர்கள்….. இத்தனை பேர் அரியரா?…..  அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவல்….!!!!

பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கிற்கு பின் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில், அதில் 62% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பொறியியல் படிப்பில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 62% மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |