விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த அமைப்புகளின் அலுவலகங்களில் அமலாகதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில் அடுத்த 5ஆண்டுகள் இந்த அமைப்பு மற்றும் இதன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும்
இந்தியாவில் செயல்பட ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் சோதனை செய்கின்றனர். மேலும் மோப்ப நாய்களைக் கொண்டும் சோதனை செய்யப் பின்னரே வாகனங்கள் விமான நிலையத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.