Categories
தேசிய செய்திகள்

பி.எப்.ஐ அலுவலகங்களில் திடீர் சோதனை… பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் அதிரடி கைது…!!!!!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பி எஃப் ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்கள். கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தலைவர் ஓ எம் ஏ சலாம் வீடு உட்பட பி எஃப் ஐ யின் மாநில மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிஎப் ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள pfi மாநில தலைமை அலுவலகத்திலும் என்ஐஏ சோதனை நடத்தப்படுகின்றது. மதுரையில் மட்டும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு சொந்தமான நெல்பேட்டை கோரிப்பாளையம், கோமதிபுரம், குலமங்கலம், வில்லாபுரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெற்றுள்ளது. மேலும் மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அராபாத் என்பவரிடம் விசாரணை நடைபெற்றிருக்கிறது. எஸ் டி பி ஐ நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றிருக்கிறது.

கடலூரில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் பியாஸ் அகமதுவிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கின்ற நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்படுகின்றது. பி எஃப் ஐ அலுவலகங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவதனால் சோதனை நடைபெறும் இடங்களில் சி ஆர் பி எஃப் மற்றும் போலீஸர் பாதுகாப்பு பணியில் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கையில் என்ஐஏ அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கைது செய்திருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி இருந்தது .

 

 

Categories

Tech |