காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி குரும்பப்பட்டி பகுதியில் ராமராஜன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வி தான் வேலை பார்த்த வடமதுரை மில்லுக்கு சென்று பி.எப் பணத்தை வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் கலைச்செல்வி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் கலைச்செல்வியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ராமராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலைச்செல்வியை தீவிரமாக தேடி வருகின்றனர்.