Categories
தேசிய செய்திகள்

பி.எம் கிசான் திட்டம்…. பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவு…. எதிர்பார்ப்பில் விவசாயிகள்….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த திட்டம் குறித்து தற்போது பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நம்நாடு விவசாயிகளால் பெருமை‌ அடைந்துள்ளது. அதன்பிறகு பி.எம் கிசான் திட்டம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிப்பதால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனால் 11-வது தவணை குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை யிலும் வழங்கப்படும்.

மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் 155261, 1800115526, 011-23381092 என்ற நம்பருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதன்பிறகு pmkisan-ict@gov in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.

இந்தத் திட்டத்தின்படி உங்களுடைய தவணை தொகையை சரிபார்ப்பதற்கு pm-kisan‌ என்ற இணையதள முகவரிக்குள் சென்று பார்மர்ஸ் கார்னர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு beneficiary status என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து ஓபனாகும் ஒரு புதிய பக்கத்தில் ஆதார் எண், மொபைல் எண்ணை பதிவு செய்து உங்களுக்கு வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |