Categories
தேசிய செய்திகள்

“பி.எஸ்.என்.எல் அறிவித்த அதிரடி ரீசார்ஜ் பிளான்”… மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்துள்ளது.

அது ரூ.153 ரீசார்ஜ் திட்டம். இதன் செல்லுபடியாகும் காலம் (வேலிடிட்டி) 3 மாதங்கள் ஆகும். இதுவரை எந்த ரீசார்ஜ் திட்டத்திலும் 250 நிமிட அழைப்பை மட்டுமே வழங்கியது. தற்போது இந்த புதிய திட்டத்தின்படி, பி.எஸ்.என்.எல் உள்பட அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

அழைப்புகளை தவிர்த்து, இந்தத் திட்டத்தில், தினசரி 1 ஜிபி அளவிலான டேட்டாவும் கிடைக்கிறது. குறிப்பிட்ட டேட்டா நன்மை தீர்ந்ததும், பயனர்கள் தொடர்ந்து 40 கேபிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் இணைய சேவையை அனுபவிக்கலாம்.

மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ்களையும் இலவசமாகப் பெறுவார்கள். இது தவிர தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் நன்மையையும் வழங்குகிறது. இருப்பினும், இந்த நன்மையை நீங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே பெறுகிறீர்கள்.

Categories

Tech |