Categories
பல்சுவை

பி.எஸ்.என்.எல் அறிவித்த அதிரடி ஆஃபர்… 31-ம் தேதியே கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் என்னும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது. குறிப்பாக இப்போது தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. அந்தவகையில் அண்மையில், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் விட மிகவும் சிக்கனமானது. அதாவது ரூ .249 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில், உங்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி இணைய தரவு (Internet Data) வழங்கப்படுகிறது. இது தவிர, வரம்பற்ற அழைப்பு (Unlimited Calling) மற்றும் 100 இலவச குறுஞ்செய்தி (SMS) வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல  இதில் ஹைலைட்ஸ் என்னவென்றால், இந்த திட்டத்தில் அரசு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு 60 நாட்கள் செல்லுபடியாகும்.

இந்த நேரத்தில் அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் தினசரி 2GB தரவு ரீசார்ஜ் திட்டத்திற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து இரண்டு மடங்கு பணத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, ஏர்டெல்லின் இந்த பலன்கள் கிடைக்கக்கூடிய ஒரு திட்டம் 499 ரூபாயும், விஐ (Vodafone- Idea) தனது 2 ஜிபி தரவுத் திட்டத்தை ரூ .555 க்கு விற்கிறது. அதே நேரத்தில், ஜியோ 2 ஜிபி ரீசார்ஜ் திட்டத்திற்கு (Recharge Plan) வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ .444 வசூலிக்கிறது.

அதேநேரம் இதில் ஒரு முக்கியமாக கவனிக்கவேண்டியது இந்த பலன்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நன்மை கிடைக்கும். அதாவது, இந்த புதிய சிறப்பு சலுகையின் பயன் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் ரீசார்ஜில் இந்த சிறப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிறுவனம் கூறுகிறது. இதற்காக, பயனர்கள் தங்களது அருகிலுள்ள சில்லறை விற்பனையாளர்களை தொடர்பு கொள்ளலாம். அதேபோல வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை மார்ச் 31 வரை மட்டுமே பெற முடியும். அதோடு இலவச சிம் கார்டும் கிடைக்கும். மேலும் தகவலுக்கு, பயனர்கள் தங்களது அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |