Categories
உலக செய்திகள்

பி.எஸ்.எப் உதயமான நாள்… இனிப்புகளை வாங்க மறுத்த வீரர்கள்…. ஏன் தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!!

1965 -ஆம் வருடம் டிசம்பர் 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.  விமானப்படை, கடற் பிரிவு மற்றும் தரைப்படை போன்றவற்றை தன்னுடைய சொத்துக்களாக கொண்ட உலகின் தனித்துவமான படை பிரிவாக இது விளங்குகிறது. கடந்த 1971 -ஆம் வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போரில் இந்த படை சிறப்பாக செயல்பட்டதற்காக அதன் பணியாளர்களுக்கு மகாவீர் சக்ரா மற்றும் வீர்சக்ரா போன்ற மிக உயரிய வீர பதக்கங்கள் வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் பி.எஸ்.எப் அமைப்பு தோன்றிய நாளன டிசம்பர் 1-ம் தேதி எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு இனிப்புகள் கொடுப்பது  வழக்கமாகும். இந்த வருடம் தீபாவளி உள்ளிட்ட சில பண்டிகைகளின் போது இனிப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்திய தரப்பில் நேற்று வழங்கப்பட்ட இனிப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தங்களது மூத்த அதிகாரிகளிடமிருந்து இனிப்புகளை வாங்கிக் கொள்ளுமாறு எந்தவிதமான அறிவுறுத்தலும் வரவில்லை எனக் கூறி இனிப்புகளை வாங்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |