Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று மாலை 3.25 மணி அளவில்  வானில் ஏவப்பட்ட உள்ளது…!!

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்,பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் , இன்று பிற்பகல் 3.25 மணியளவில் வானத்தில் ஏவப்படவுள்ளது .

‘ரிசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை பூமியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்து உள்ளது.   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் வைத்து இச்செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலமாக இன்று மாலையில் 3.25 மணி அளவில்  வானில்  ஏவப்படஉள்ளது .

எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து,  ‘கவுண்ட்டவுன்’ செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மேலும்,அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள், இத்தாலி,இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த  1 செயற்கைகோள்,  என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட் மூலம்  விண்ணுக்கு அனுப்பப்படுகின்றது .

Categories

Tech |