தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் இன்று மதியம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட தயாராக உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 1,410 எடையுள்ள சி. எம். எஸ் 0.1 என்ற செயற்கைகோளை பூமி கண்காணிப்பு பணிக்காக தயாரித்து உள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-50 எனும் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை இன்று மாலை வானிலை நிலவரம் அறிந்து விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கல்வி ,மருத்துவம், பேரிடர் மேலாண்மை போன்ற காரணங்களுக்காக இந்த செயற்கைக்கோ விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்44.4 மீட்டர் உயரம் கொண்டதாகும்,இதில் முதல் நிலையில் திட எரிபொருள்களும், இரண்டாம் நிலையில் திரவ எரிபொருள்களும் நிரப்பப்பட்டுள்ளன. இது இந்தியாவின் 52ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 25 மணி நேர கவுண்டவுன் உடன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. மேலும் ராக்கெட் மற்றும் செயற்கை கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகின்றனர். 25 மணி நேரம் முடிந்த பிறகு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணி அளவில் விண்ணில் ராக்கெட் பாய தயாராக உள்ளது. என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.