அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 – 23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு உணவு மற்றும் உறையுள் கட்டணத்தை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 175, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 350, ஐஐடி மற்றும் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ரூபாய் 225 என வழங்கப்பட்டு வந்த நிலையில் அனைவருக்கும் ரூபாய் 400 தமிழக அரசு உயர்த்தியுள்ளது.