தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி மாற்றப்பட்டால் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலை உடனடியாக மாற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர். அதாவது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்,பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிடிஆர் அடிக்கடி பதிலடி கொடுத்து வருவதால், நிதியமைச்சரை மாற்ற வேண்டும் என முதல்வருக்கு மத்திய அரசாங்கம் பிரஷர் கொடுப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டமானது அமலுக்கு வரும் என்று கூறியதால். அரசு ஊழியர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் நிதி அமைச்சர் பொருளாதார ரீதியாகவும், துறை ரீதியாகவும் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்றுகூறியுள்ளார். அதுமட்டுமின்றி மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அது இது என்று பல்வேறு சலுகைகள் இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் கூறியுள்ளார். இதனால் நிதி அமைச்சர் மீது அரசு ஊழியர்கள் செம கடுப்பில் இருப்பதாகவும், அமைச்சரவை மாற்றப்பட்டால் நிதி அமைச்சரை உடனடியாக வேறு துறைக்கு மாற்ற வேண்டும் எனவும், பிடிஆர் நிதியமைச்சராக இருக்கும் வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமுலுக்கு வராது என்றும் கூறி வருகின்றனர்.
இதனையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் ஆசைப்பட்டது போலவே, அறநிலையத்துறைக்கே அவரை அமைச்சராக ஆக்கி விடுங்கள் என்றும் கூறுகின்றனர். இதனால் அமைச்சரவை மாற்றப்படும் போது நிதி அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் மாற்றாவிட்டால் அரசு ஊழியர்களின் எதிர்ப்பை முதல்வர் சந்திக்க நேரிடும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் பெரிய கண்ணப்பன், ராஜ கண்ணப்பன், முத்துசாமி மற்றும் ஐ பெரியசாமி ஆகியோரும் துறை ரீதியாக மாற்றப்படுவார்கள் என்று சில தகவல்கள் வெளிவருகிறது.