Categories
தேசிய செய்திகள்

பீகாரில் குற்றங்கள் குறைவு…. இது தான் காரணமா?…. முதல்வர் நிதிஷ் அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் பூரண மதுவிலக்கை நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை, மதுவை பதுக்கி வைப்போர் மற்றும் குடிப்பவர்கள் மீது 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியதால் பலரும் எனக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

ஆனாலும் நான் இதில் உறுதியாக இருக்கிறேன். மேலும் இது பற்றி மக்களிடம் கேட்டபோது, அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிவித்தனர். எனவே நான் மதுவுக்கு எதிராக நிற்கிறேன். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட  பிறகு குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்றும் அப்படி குற்றங்கள் ஏதும் நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நிர்வாகமும் காவல் துறையும் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து ஓரிடத்திலிருந்து நக்சல்களின் சம்பவம் பதிவாகி விசாரணை செய்து வருகிறது. நக்சல் விவரம் விவகாரம் என்பது வெறும் விஷமாகும். ஆனால் பொதுவான குறித்த குற்ற சம்பவங்கள் மாநிலத்தில் குறைந்துள்ளது. மேலும் மாநிலத்தில் மதுவிலக்கு அறிவிக்கப்பட்ட பிறகு குற்றங்களின் விகிதம் குறைந்துள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று அவர் கூறினார்.

Categories

Tech |