பீகாரின் சட்டசபை தேர்தலில் சுயட்சை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பத்தாம் தேதி நடைபெறும். இறுதிக்கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வடகிழக்கு பீகார் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படுகிறது. அதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ரவீந்திர நாத் சிங் என்பவர் போட்டியிடுகின்றார். இன்று அவர் மீது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். அதில் படுகாயமடைந்த ரவீந்திர நாத் சிங் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.