Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்… முதல் மந்திரிக்கு கொரோனா… அதிர்ச்சியில் பாஜக…!!!

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான தேவேந்திர பட்னாவிஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” கொரோனா தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தற்போது கடவுள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்கிறார். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளேன்.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்து வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Categories

Tech |