பீகார் சட்டசபைத் தேர்தலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்த நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் தொடங்குகிறது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல், 71 தொகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் 94 தொகுதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 78 தொகுதிகளுக்கான மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
அதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மாலையுடன் முடிவடைந்தது. மூன்றாவது கட்ட சட்டசபை தேர்தலில் 110 பெண்கள் உட்பட மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அந்த தேர்தலில் 2.35 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.