ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறும் எதிர்கட்சிகள் இந்தியாவை பலப்படுத்துவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 28-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் திரு. மோடி பீகாரில் இன்று நேரடி பிரசாரத்தை தொடங்கினார். சாதாரம் பகுதியில் உள்ள பையடா மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திரு. மோடி பீகாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெருவித்தார். கொரோனா நெருக்கடியை பீகார் அரசு சிறப்பாக கையடதாகவும் மக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொண்டதாகவும் பாராட்டு தெருவித்தார். முதலமைச்சர் திரு நிதீஷ்குமாரின் ஆட்சியில் பீகாரில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு முன்னர் பீகாரை ஆட்சி செய்தவர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்ததாகவும் விமர்சித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறும் எதிர்கட்சிகள் இந்தியாவையும் பலவீனபடுத்துவதாகவும் அவர்களால் மக்களிடம் எப்படி ஓட்டு கேட்க முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் திரு. மோடி குற்றம்சாட்டினார்.