பீகார் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் முன்னதாக துபாய்-க்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர், நளன்ந்தா பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய் தொற்று அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 1,456 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.