Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு …!!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

அக்டோபர் 28 நவம்பர் 3,7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பீகாரில் மொத்தம் 56 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 வாக்குகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள 14 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏ.ன் கல்லூரிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பீகார் தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பிணை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எம்.எல்.எ-கள் அணி மாறுவதை தடுக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுஜாவால மூத்த தலைவர் அவினாஷ் பாண்டி  ஆகியோரை அக்கட்சி பாட்னாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. குதிரை பேரங்கள் தடுக்கும் விதமாக தேர்தலில் வெற்றிபெறும் காங்கிரஸ் வேட்பாளர்களை பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்க அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. தேவைப்பட்டால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் பஞ்சாப் மாநிலங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. பீகாரில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 40 முதல் 45 இடங்கள் வரை கிடைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |